மேலும் செய்திகள்
பிரதமர் மோடி பிறந்தநாள்; மக்களுக்கு அன்னதானம்
18-Sep-2025
புதுச்சேரி: பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி உருளையன்பேட்டை, தென்னஞ்சாலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மோடி மக்கள் சேவை மைய நிறுவனர் பிரபுதாஸ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு, இனிப்பு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பா.ஜ., தொகுதி தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் சுதாகர், ஜெயபிரகாஷ் நாராயணன் மகளிரணி நிர்வாகி கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.
18-Sep-2025