மேலும் செய்திகள்
தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
24-Nov-2024
புதுச்சேரி : கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.புதுச்சேரி, கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நேற்று சிறப்பு ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், முதல்வர் ரங்கசாமி, ரமேஷ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
24-Nov-2024