சிறப்பு மருத்துவர் சங்கம் கவர்னர், முதல்வருக்கு நன்றி
புதுச்சேரி : இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில், மருத்துவ கண்காணிப்பாளருக்கு பதவி உயர்வு வழங்கியதற்கு, கவர்னர் மற்றும் முதல்வருக்கு, அரசு சிறப்பு மருத்துவர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில், கண்காணிப்பாளராக பணிபுரிந்தவர் செவ்வேள். இவருக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குநராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதற்காக, கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோருக்கு, அரசு சிறப்பு மருத்துவ சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.அதனை தொடர்ந்து, இந்த சங்கத்தின் சார்பில், காலியாக உள்ள நிபுணர்கள் மற்றும் ஜி.டி.எம். ஓ., பணியிடங்களை நிரப்பவும், சுகாதார வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என, சிறப்பு மருத்துவ சங்க தலைவர் குமார் தலைமையில், செவ்வேளிடம் கோரிக்கை வைத்தனர். சந்திப்பின் போது, சங்கத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.