முதுகெலும்பு சிகிச்சை நிபுணர் சிறப்பு மருத்துவ ஆலோசனை
புதுச்சேரி : சென்னை காவேரி மருத்துவமனை, முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் நேற்று புதுச்சேரியில் ஆலோசனை வழங்கினர்.சென்னை காவேரி மருத்துவமனை சிறப்பு மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதரின் மருத்துவக் குழுவை சேர்ந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் செல்வின் பிரபாகர், நேற்று புதுச்சேரி ரெயின்போ நகரில் உள்ள சென்னை காவேரி மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்கினார்.முகாமில், முதுகு வலி, கால் வலி, பின் கழுத்து மற்றும் கழுத்து பிரச்னைகள், முதுகெலும்பு புற்றுநோய், முதுகெலும்பில் தொற்றுநோய், முதுகெலும்பு காசநோய், ஸ்கோலியோசிஸ் உள்ளிட்ட நோய்களுக்கு ஆலோசனை வழங்கினர்.