உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலாஜி வித்தியாபீத் பல்கலையில் விளையாட்டு மற்றும் கலை விழா

பாலாஜி வித்தியாபீத் பல்கலையில் விளையாட்டு மற்றும் கலை விழா

பாகூர் : பிள்ளையார்குப்பம் ஸ்ரீ பாலாஜி வித்தியாபீத் நிகர்நிலை பல்கலைக்கழக பிசியோதெரபி கல்லூரியில், விளையாட்டு மற்றும் கலை விழா நடந்தது. பிசியோதெரபி கல்லுாரி மாணவர் மன்றம் சார்பில், 2ம் ஆண்டு விளையாட்டு மற்றும் கலாசார விழா ஒரு வாரம் நடந்தது. போலீஸ் ஐ.ஜி., அஜித் குமார் சிங்லா, சீனியர் எஸ்.பி., பிரவீன் குமார் திரிபாதி, ஸ்ரீ பாலாஜி வித்தியாபீத் பல்கலை துணைவேந்தர் நிஹார் ரஞ்சன் பிஸ்வாஸ் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டு தலைவர் சண்முகானந்த், மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகராஜ், தலைவர் நர்மதா, செயலாளர் ஆகீபா நவுரீன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ஒரு வாரம் நடைபெற்ற விளையாட்டு மற்றும் கலாசார போட்டிகளில் மொத்தம் 250 மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப் படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ