மேலும் செய்திகள்
பள்ளி விளையாட்டு விழா மாணவர்கள் அசத்தல்
27-Jan-2025
புதுச்சேரி: மூலகுளம் ஸ்டான்ஸ்போர்ட் சர்வதேச மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின பரிசளிப்பு விழா நடந்தது.பள்ளி முதல்வர் பிரீத்தி வரவேற்றார்.சாம்பால் எஜிகேஷன் டிரஸ்ட் இயக்குனர் குமரவேல் முன்னிலை வகித்தார். புதுச்சேரி பல்கலைக் கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை உதவி பேராசிரியர் ராம் மோகன் சிங், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் ஆகியோர் 2024-25ம் ஆண்டிற்கான விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினர்.தேசிய, மாநில, வட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது.இறகு பந்து போட்டியில் சர்வதேச அளவில் தேர்வாகிய பிளஸ் 2 மாணவர் மிதிலேஷ் கிருஷ்ணன் கவுரவிக்கப்பட்டார்.தொடர்ந்துபள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
27-Jan-2025