உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., கூட்டணி அரசை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் மாநில காங்., பொதுச் செயலாளர் ஆவேசம்

பா.ஜ., கூட்டணி அரசை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் மாநில காங்., பொதுச் செயலாளர் ஆவேசம்

புதுச்சேரி : வரும் தேர்தலில் பா.ஜ., கூட்டணி அரசை புதுச்சேரி மக்கள் வீட்டிற்கு அனுப்பி விடுவர் என, காங்., மாநில பொதுச் செயலாளர் சங்கர் தெரிவித்தார்.இதுெதாடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் முருகன், ராகுல் கண்ணை திறந்து கொண்டு இருக்க வேண்டுமென என, கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். மத்திய அமைச்சர் முருகன், அவரது துறையின் மூலம் தமிழகம், புதுச்சேரி மக்களுக்கு செய்த சாதனை என்னவென்று பட்டியலிட முடியுமா?கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடன் சுமையை மூன்று மடங்குகளாக பெருக்கியது, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தராமல் விட்டது, அதானி மற்றும் அம்பானி குழுமங்களுக்கு நாட்டை தாரை வார்த்தது தான் பா.ஜ., செய்த சாதனை.கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.,விற்கு புதுச்சேரி மக்கள் சவுக்கடி கொடுத்தனர். அதேபோன்று, தற்போது அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ள என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசை மக்கள் வரும் சட்டசபை தேர்தலில் வீட்டுக்கு அனுப்புவர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ