மாநில அளவிலான அபாகஸ் மற்றும் வேத கணித போட்டி
பாகூர்: ஸ்ரீ சுபிக் ஷம் அபாகஸ் மற்றும் வேத கணிதம் சார்பில், 4வது மாநில அளவிலான அபாகஸ் மற்றும் வேத கணித போட்டி உச்சிமேடு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இப்போட்டியை, புதுச்சேரி எஸ்.பி., ரங்கநாதன் மற்றும் அபயம் தொண்டு அறக்கட்டளை நிறுவனர் சுந்தரமுருகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இப்போட்டியில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்டுத்தினர். தவளக்குப்பம் ஆச்சார்யா பள்ளி முதல்வர் கார்த்திகா சீனிவாசன், பேராசிரியர் பூங்குழலி பெருமாள், ஆசிரியர் கலைவாணி சதீஷ் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் யோகா, பரதநாட்டியம், தட்டச்சு தேர்வில் டிஸ்டின்க் ஷன் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினர். முன்னதாக, சிறப்பு விருந்தினர்களுக்கு ஹரிஹரன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். ஏற்பாடுகளை சுபிக் ஷம் அபாகஸ் மற்றும் வேத கணித நிறுவனர் நாகலட்சுமி செய்திருந்தார்.