மேலும் செய்திகள்
இந்திய செஞ்சிலுவை சங்கம் மாணவர்களுக்கு போட்டிகள்
14-Sep-2024
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு விவசாயிகளுக்கு விதை சிகிச்சை முறைகள் குறித்து வேளாண் மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர். கோயம்புத்துார் காருண்யா பல்கலைக்கழக மாணவிகள் சோபியா, அமிர்தவர்ஷினி, பிரியதர்ஷினி, செல்சியா மேரி, ரேணு ஸ்ரீ, லதா, தீபிகாஸ்ரீ ஆகிய மாணவிகள் திருக்கனுார் பகுதியில் கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக கூனிச்சம்பட்டு கிராம விவசாயிகளுக்கான வேளாண் செயல் விளக்கம் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு திருக்கனுார் வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன், உதவி வேளாளர் அலுவலர் திருமுருகன், கிராம விரிவாக்க பணியாளர் தங்கதுரை முன்னிலை வகித்தனர். இதில், மாணவிகள் மண் மாதிரி சேகரிப்பு தொழில் நுட்பங்கள், விதை சிகிச்சை முறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், விவசாயிகளுக்கான நவீன வேளாண் தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து விளக்கினர்.
14-Sep-2024