உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுப்பையா சிலை - இந்திரா சிக்னல் வரை சாலையை அகலப்படுத்த ஆய்வு

சுப்பையா சிலை - இந்திரா சிக்னல் வரை சாலையை அகலப்படுத்த ஆய்வு

புதுச்சேரி: நெல்லித்தோப்பு சுப்பையா சிலை முதல் இந்திரா காந்தி சிக்னல் வரை சாலை அகலப்படுத்த அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.நெல்லித்தோப்பு, சுப்பையா சிலையில் இருந்து இந்திரா சிக்னல் வரை உள்ள சாலை 17 மீட்டர் அகலத்தில் குறுகலாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து 17 மீட்டர் சாலையை 38 மீட்டர் சாலையாக மாற்ற சாலையோர பகுதிகளை, நில ஆர்ஜிதம் செய்ய ஆய்வு செய்யப்பட்டது.இதில் கட்டடங்களுக்கான மதிப்பீடுகள் மறு ஆய்வு செய்ய கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நேற்று அனைத்து துறை அதிகாரிகள் சுப்பையா சிலை முதல் இந்திரா சிக்னல் வரை சாலை விரிவாக்கம் தொடர்பாக பொதுப்பணித்துறை செயலர் ஜெயந்த்திரே, சப் கலெக்டர், கிழக்கு எஸ்.பி., இஷிதா, நகராட்சி ஆணையர்கள் கந்தசாமி, சுரேஷ் ராஜ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், உதவி பொறியாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில், சுப்பையா சிலையிலிருந்து இந்திரா சிக்னல் வரை உள்ள சாலை விரிவாக்கத்திற்கான தனியார் இடம் ஆர்ஜிதம் செய்வது மற்றும் கட்டடங்கள் கடைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தின் கீழ், ரூ. 22 கோடி இழப்பிடு வழங்க முடிவு எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை