உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம்

சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம்

புதுச்சேரி: நைனார்மண்டபம், மூகாம்பிகை நகர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் பா.ஜ., மாநில துணைத் தலைவர் பாஸ்கர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். புதுச்சேரி, முதலியார்பேட்டை தொகுதி நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர் 7 வது குறுக்கு வீதியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழாவையொட்டி, சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உற்சவத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., மாநில துணை தலைவருமான பாஸ்கர், தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். மேலும், பா.ஜ., நிர்வாகி சுரேஷ்குமார், கோவில் நிர்வாகிகள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை