உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

புதுச்சேரி : புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தில் மின்கசிவால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி நுாறடி சாலையில், போக்குவரத்து துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, ஆணையர் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் இயங்கி வருகிறது. நேற்று காலை 9:30 மணிக்கு முதல் தளத்தில் உள்ள ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள கருத்தரங்கு கூடத்தை கூட்டம் நடைபெற இருந்தது. அதற்காக துப்புறவு பணியாளர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அலுவலக உதவியாளர் ஏ.சி.,யை ஆன் செய்தபோது திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்தது. புகை மூட்டம் சூழந்தது. உடன் துப்புரவு பணியாளரும், அலுவலக உதவியாளரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தது.சக ஊழியர்கள் சென்று பார்த்தபோது ஏ.சி., மற்றும் ஜன்னல் திரை சீலைகள், பால் சீலிங், ேஷாபா, நாற்காலிகள் தீ பிடித்து எரிந்தன.இதுபற்றி தகவலறிந்த மின் துறையினர் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்தனர். கோரிமேடு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.திடீர் தீ விபத்து காரணமாக புதிய வாகனங்கள் பதிவு, ஓட்டுனர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட பணிகள் மதியம் வரை தடைப்பட்டது. பின்னர், தீ விபத்து ஏற்பட்ட கருத்தரங்கு கூடத்தை தவிர பிற பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கியதை தொடரந்து மதியத்திற்கு பிறகு அலுவலக பணிகள் துவங்கியது.இந்த தீ விபத்து குறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை