மேலும் செய்திகள்
மின் மீட்டர் வெடித்து தீ பரவியதால் பரபரப்பு
24-May-2025
புதுச்சேரி : சாப்ட்வேர் கம்பெனியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, காமராஜர் சாலை, பழைய சாரம் கலெக்டர் அலுவலகம் அருகில், மூன்றாவது மாடியில் ஏ 2 சாப்ட்வேர் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனி, நேற்று மாலை 5:45 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு அதிகாரி மனோகர் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர். தீவிபத்தில் கம்பெனியில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது.
24-May-2025