உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூட்டுறவு சங்கங்களுக்கு டிராக்டர் வழங்கல்

கூட்டுறவு சங்கங்களுக்கு டிராக்டர் வழங்கல்

புதுச்சேரி : புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த 18 விவசாய கூட்டுறவு சங்கங்களுக்கு டிராக்டர்களை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி அரசு கூட்டுறவு துறை சார்பில் விவசாய கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நடப்பு ஆண்டில் புதுச்சேரி பிராந்தியத்தில் செயல்படும் 16 கூட்டுறவு விவசாய சங்கங்கள் மற்றும் காரைக்கால் பிராந்திய 2 கூட்டுறவு விவசாய சங்கத்திற்கு டிராக்டர் கொள்முதல் மானியமாக தலா ரூ. 4.35 லட்சம் முதல் ரூ. 4.5 லட்சம் வழங்கப்பட்டது.இதன் மூலம் வாங்கப்பட்ட 18 டிராக்டர்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி, 18 கூட்டுறவு விவசாய சங்கங்களுக்கு டிராக்டர்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், ரமேஷ் எம்.எல்.ஏ., கூட்டுறவுத்துறை செயலர் நெடுஞ்செழியன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தையா உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ