சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் பாதுகாப்பு தின விழா
புதுச்சேரி: புதுச்சேரி, தி சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் 54 வது பாதுகாப்பு தின விழா நடந்தது.நிறுவனத்தின் மனிதவள துறை தலைவர் முத்துசாமி வரவேற்றார். பொது மேலாளர் பாலச்சந்தர் முன்னிலை வாகித்தார். தொழிற்சாலைகள் மற்றும் கொதிக்கலன் ஆய்வாளர் ஞானவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.சுப்ரீம் நிறுவனத்தின் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.