உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 13ம் தேதி சூர சம்ஹாரம்

13ம் தேதி சூர சம்ஹாரம்

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி பிரோற்சவ விழாவையொட்டி தாருகா சூர சம்ஹாரம் வரும் 13ம் தேதி நடக்கிறது. நெட்டப்பாக்கத்தில் பழமை வாய்ந்த பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத செல்வமுத்துக்குமரப்ப சுவாமிக்கு கந்தசஷ்டி பிரமோற்சவ பெருவிழா விக்னேஸ்வர பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை செல்வமுத்துகுமரப்ப சுவாமிக்கு துவஜாரோஹணம், இரவு இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 17ம் தேதி வரை தினமும் செல்வ முத்துகுமரப்பா சுவாமிக்கு காலை அபிேஷக ஆராதனை, மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. வரும் 13ம் தேதி காலை தாருகா சூர சம்ஹாரம், 15ம் தேதி மாலை 6:00 மணிக்கு சூரபத்ரன் சம்ஹாரம், 16ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி