உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி

கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி

தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு

புதுச்சேரியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி, தேர்தல் ஆணைய அட்டவணைப்படி நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு படிவங்கள், வாக்காளர்களுக்கு வழங்கி, திரும்ப பெறும் பணியை மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் ஆகியோர் நேற்று மங்கலம் மற்றும் லாஸ்பேட்டை தொகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது, வாக்காளர்களை விசாரித்த தலைமை தேர்தல் அதிகாரி, கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருப்பின் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் உதவியை நாட அறிவுறுத்தினார். ஆய்வின்போது மங்கலம் மற்றும் லாஸ்பேட்டை தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ