உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாரதாம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

சாரதாம்பாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரி; சாரதாம்பாள் கோவில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.புதுச்சேரி, எல்லப்பிள்ளைச்சாவடி நுாறடிச் சாலையில் சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று வசந்த் நவராத்திரியை முன்னிட்டு சாரதாம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 7:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை