உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டேபிள் டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா

டேபிள் டென்னிஸ் போட்டி பரிசளிப்பு விழா

நெட்டப்பாக்கம்: புதுச்சேரி கல்வித்துறை வட்டம் -3 அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி கரியமாணிக்கம் ஹோலி பிளவர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் நடந்தது. போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 60 அணிகள் பங்கேற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் ராஜசேகரன், சிவக்கொழுந்து ஆகியோர் போட்டியினை துவக்கி வைத்தனர். உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், மனோபாலா, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பழனி, முரளிதரன், ரகு, ரவீந்திரன், கமலக்கண்ணன், பாலமுருகன், தரணிதரன், இளவரசன், தென்னகதழிழன் ஆகியோர் போட்டியை நடத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர் தணிகை குமரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி