மேலும் செய்திகள்
7 பி.சி.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
28-Aug-2025
காரைக்கால்: காரைக்கால் துணை கலெக்டராக பூஜா நேற்று பொறுப்பேற்றார். காரைக்கால் துணை கலெக்டராக பணியாற்றிய அர்ஜூன் ராமகிருஷ்ணன் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரிக்கு புதியாக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி நேற்று காரைக்கால் துணை கலெக்டராக பொறுப்பேற்றார். அவருக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குனர் குலசேகரன்,மாவட்ட தேர்தல் அலுவலக கண்காணிப்பாளர் பக்கிரிசாமி, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், உள்ளாட்சிதுறை துணை இயக்குநர் சுபாஷ், தாசில்தார் செல்லமுத்து உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
28-Aug-2025