மேலும் செய்திகள்
பண்ருட்டி தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரம்
08-Mar-2025
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க., சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பாக்முடையான்பட்டில் நடந்தது.தொகுதி செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் இளம்பரிதி, ரவிந்திரன், அமைப்பு சாரா ஆட்டோ தொழிலாளர் அணி அமைப்பாளர் மதிமாறன், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி, மாநில துணை அமைப்பாளர்கள் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொகுதி அவைத் தலைவர் கணேசன், தொகுதி துணைச் செயலாளர்கள் ஏழுமலை, சுகுணா வீரமணி, திருலோகச்சந்தர், பொருளாளர் ஆகியோர் வரவேற்றனர். தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா, தமிழக தி.மு.க., அரசின் சாதனைகள் குறித்து பேசினர். கூட்டத்தில், பேச்சாளர்கள் கருணாநிதி, ஜாஸ்மின், அவைத்தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் கருத்துரை வழங்கினர். பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. தி.மு.க., மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, நந்தா சரவணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் குமரவேல், லோகையன் உட்பட பலர் பங்கேற்றனர். தட்டாஞ்சாவடி தொகுதி மாநில பிரதிநிதி ராஜசேகர் நன்றி கூறினார்.
லாஸ்பேட்டை - பாக்முடையான்பட்டு செல்வ விநாயகர் கோவில் அருகில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்திற்கு, சாலையை ஆக்கிரமித்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் லாஸ்பேட்டை உள்ளிட்ட பிரதான பகுதிகளுக்கு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியமால் கடும் அவதியடைந்தனர்.
08-Mar-2025