உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  டீ கடை உரிமையாளர் தற்கொலை

 டீ கடை உரிமையாளர் தற்கொலை

விருத்தாசலம்: கால் வலியால் அவதிப்பட்டு வந்த டீ கடை உரிமையாளர், துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் மோகன்பாபு, 42; டீ கடை நடத்தி வந்தார். திருமணமாகி 20 மற்றும் 18 வயதில் இரண்டு மகள்கள், 15 வயதில் மகன் உள்ளார். கால் வலியால் நீண்டகாலமாக அவதிப்பட்டு வந்த மோகன்பாபு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில், பாத்ரூம் சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவரது மனைவி உமா சென்று பார்த்தபோது, பாத்ரூமில் துாக்குபோட்டு இறந்து கிடந்தார். இது குறித்து உமா கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி