உள்ளூர் செய்திகள்

டீ கடைக்காரர் கைது

புதுச்சேரி, : பள்ளி அருகே சிகரெட் விற்ற டீ கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி லாஸ்பேட்டை, விமான நிலையம் செல்லும் சாலையில் நாவலர் அரசு பள்ளி உள்ளது. பள்ளி அருகே சிகரெட் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்க தடை உள்ளது. பள்ளி அருகே டீக்கடையில் சிகரெட் விற்கப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு புகார் வந்தது. அதையடுத்து, போலீசார் நேற்று அந்த டீக்கடையை சோதனை செய்தனர். கடையில் இருந்து ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 20 சிகரெட் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, டீ கடை உரிமையாளர் முத்துவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை