உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

 ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி கல்லுாரி கருத்தரங்க கூடத்தில் நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக ஆசான்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் சுகந்தி விஸ்வநாதன் கலந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கான கற்பித்தல்' என்ற தலைப்பில் பேசினார். பின் மாணவர்களிடையே எழும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆசிரியர்கள் சரியான காரணங்களை கண்டறிந்து சிக்கலை தீர்க்க குழுவாக செயல்பட வேண்டும் என்பதை காணொலி காட்சி மூலம் விளக்க வேண்டும் என்றார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை ஆங்கில துறை தலைவர் இளமாறன் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ