கவர்னர், முதல்வருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ் அறிக்கை; புதுச்சேரி அரசு பள்ளிகளில் பணியாற்றும் 289 ஒப்பந்த பட்டதாரி மற்றும் விரிவுரையாளர் ஆசிரியர்களுக்கான பணி ஆகஸ்ட் மாதம் முதல் வரும் 2026ம் ஆண்டு மார்ச் வரை 8 மாதம் நீட்டிப்பதற்கான கோப்பிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.இதற்காக புதுச்சேரி கவர்னர், கல்வித்துறை செயலர், இயக்குநருக்கும், உறுதுணையாக இருந்த முதல்வர், கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.