உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கழிவறை திட்டத்தில் ரூ.60 லட்சம் மோசடி; தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கைது:; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

கழிவறை திட்டத்தில் ரூ.60 லட்சம் மோசடி; தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கைது:; லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

புதுச்சேரி : மத்திய அரசின் தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.60 லட்சம் மோசடி செய்த வழக்கில், தற்காலிக ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அரியாங்குப்பம் கொம்யூனில், கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021வரையில் நடந்த மத்திய அரசின் தனிநபர் கழிவறை கட்டும் (ஸ்வச் பாரத்) திட்டத்தில், கழிவறை கட்டாமலே ரூ.59.89 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தற்போதைய வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிந்து, இத்திட்டத்தில் அரியாங்குப்பம் கொம்யூனில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றிய தற்போது பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் விவேகானந்தன், ஒப்பந்த அடிப்படையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணி புரிந்து, தற்போது சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் ராஜசேகரன் மற்றும் 8 கான்ட்ராக்டர்களை தேடிவந்தனர். இந்நிலையில் சீனியர் எஸ்.பி., இஷாசிங், எஸ்.பி., நல்லாம் கிருஷ்ணராயபாபு ஆகியோர் வழிகாட்டுதலுடன், இன்ஸ்பெக்டர் தனசேகரன், ஏட்டு ஞானகுரு அம்பேத்கர், போலீஸ்காரர் விக்னேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று லாஸ்பேட்டை வள்ளலார் நகரில் வீட்டில் இருந்த தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ராஜசேகரனை கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை