100 நாள் வேலை திட்டம் சபாநாயகர் துவக்கி வைப்பு
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நடக்கும் தேசிய ஊரக வேலை திட்டப்பணிகளை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.மணவெளி தொகுதி, தவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையம் சம்போடை குளம் வாய்க்காலை, தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் துார் வாரி ஆழப்படுத்தும் பணி ரூ.4.80 லட்சம் மதிப்பில் நேற்று துவக்கப்பட்டது. இதே போல், நோணாங்குப்பம் தண்ணீர் தொட்டி வாய்க்காலை துார் வாரி, ஆழப்படுத்தும் பணி ரூ.3.20 லட்சம் மதிப்பில் நடக்கிறது. இந்த இரு இடங்களில் ரூ. 8 லட்சம் மதிப்பில் நடக்கும் திட்டப் பணிகளை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேசன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம், பணி ஆய்வாளர் கணேசன், பா.ஜ., பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.