உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சங்கராபரணி ஆற்றில் தடுப்பணைகள் நிரம்பின

சங்கராபரணி ஆற்றில் தடுப்பணைகள் நிரம்பின

திருக்கனுார் : திருக்கனுார் பகுதியில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள் கன மழையால் நிரம்பி வழிகின்றன.புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் கடந்த 7ம் தேதி மாலை முதல் நேற்று முன்தினம் 8ம் தேதி மாலை வரை தொடர் மழை பெய்தது.இதன் காரணமாக திருக்கனுார் பகுதியில் உள்ள சங்காரபரணி ஆற்றின் குறுக்கே கூனிச்சம்பட்டு, கைக்கிலப்பட்டு பகுதியில் உயர்மட்ட பாலத்துடன் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள், செட்டிப்பட்டில் அமைந்துள்ள தடுப்பணை, கைக்கிலப்பட்டு பழைய தடுப்பணை உள்ளிட்டவை நேற்று முன்தினம் இரவு முதல் நிரம்பி வழிந்து வருகிறது.திடீர் தொடர் மழையால் நெல், உளுந்து, காராமணி உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இருப்பினும், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணைகள் முழுமையாக நிரம்பி உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ