மேலும் செய்திகள்
பைக் - கார் மோதல் தாய் பலி; குழந்தைகள் காயம்
16-Mar-2025
புதுச்சேரி,: புதுச்சேரி அருகே இரண்டு பெண் குழந்தைகளை கடலில் வீசி தந்தை கொலை செய்த வழக்கு, காலாப்பட்டு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.பெரிய காலாப்பட்டுகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தவேல்; கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஜோவிதா, 4; சஸ்மிதா, 1; ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த 2024ம் ஆண்டு ஆனந்தவேல், மனைவி ஒரு (பாலியல்) வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அந்த அவமானத்தால் ஆனந்தவேலு தனது இரு பெண் குழந்தைகளையும் பெரிய காலாப்பட்டு குப்பம் பகுதி கடற்கரையில் வீசிக்கொன்றார்.குழந்தைகள் சடலம் கரை ஒதுங்கியது, தமிழகப் பகுதி என்பதால் மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து ஆனந்தவேலை கைது செய்தனர். இந்நிலையில், சம்பவம் நடைபெற்றதும், ஆனந்தவேல் வசித்ததும் புதுச்சேரி பகுதியான காலாப்பட்டு என்பதால், வழக்கை காலாப்பட்டு காவல் நிலையத்திற்கு மாற்ற தேவையான நடவடிக்கையை மரக்காணம் போலீசார் மேற்கொண்டனர்.அதன்படி தற்போது அந்த வழக்கு காலாப்பட்டு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. நேற்று முன்தினம் காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
16-Mar-2025