உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொன்விழா கண்ட மதகடிப்பட்டு அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாத அவலம்

பொன்விழா கண்ட மதகடிப்பட்டு அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாத அவலம்

திருபுவனை: பொன் விழா கண்ட மதகடிப்பட்டு அரசு ஆரம்பப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் இல்லாத அவல நிலை உள்ளது. புதுச்சேரி மதகடிப்பட்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசித்திப்பெற்ற கால்நடை வார சந்தை, வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை வளாகத்தை ஒட்டி அரசு ஆரம்பப்பள்ளி (சி.பி.எஸ்.இ.,) செயல்பட்டு வருகிறது. கடந்த 68 ஆண்டுகளுக்கு முன்பு மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியில் தனியார் கட்டடத்தில் அரசு ஆரம்ப பள்ளி தொடங்கப்பட்டது. பின்னர், இப் பள்ளி அதே வீதியில் சந்தை தோப்புக்கு அருகில் அரசு இடத்திற்கு மாற்றப்பட்டது. பள்ளிக்கு போதிய கட்டட வசதி இல்லாமையால் பள்ளிக்கு அருகில் உள்ள சந்தை தோப்பு வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு அங்கு பள்ளி இடம் பெயர்ந்தது. இதைத்தொடர்ந்து பள்ளியைச் சுற்றிலும் பாதுகாப்பான சுற்று சுவர் அமைக்கப்பட்டது. பழமையான இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் முதல் தலைமுறை என்றால் மூன்றாவது தலைமுறையான அவர்களின் பேரப் பிள்ளைகள் தற்போது பள்ளியில் பயின்று வருகின்றனர்.பிரசித்திப்பெற்ற வாரசந்தை; பிரசித்திப்பெற்ற இந்த சந்தை, தொடக்க காலத்தில் 'மதகடிப்பட்டு மாட்டுச் சந்தை' என்றே அழைக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான வண்டி மாடுகள், ஏர் உழவு மாடுகள், கறவை மாடுகள், நாட்டு மாடுகள், கலப்பின மாடுகள், இறைச்சி மாடுகள் என ஏராளமான மாடுகள் சந்தைக்கு விற்பனைக்கு வருவது வழக்கம்.பொன்விழா கண்ட பள்ளி: பொன்விழா கண்ட, இப்பள்ளிக்கு விளைாட்டு மைதானம் இல்லை. மாணவர்கள் அருகிலுள்ள சந்தை தோப்பு வளாகத்தில் தான் விளையாட வேண்டும். ஆனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் வார சந்தைக்கு அதிகாலை முதல் மாலை வரை கால்நடைகள் மற்றும் வியாபாரிகளின் சரக்கு வாகன போக்குரவத்தாலும் மாணவர்கள் வெளியே நடமாட இயலாது. பள்ளிக்கு விளையாட்டு மைதானம் தேவை:மற்ற நாட்களில் பள்ளிக்கு தெற்கே மாரியம்மன் கோவில் வீதி, அங்காளம்மன் கோவில் வீதி மற்றும் வடக்கே நான்கு வழி சாலை சர்வீஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள் போக்குவரத்து காரணமாக மற்ற நாட்களிலும் பள்ளி மாணவ மாணவிகள் சந்தை வளாகத்தில் விளையாட இயலாத நிலை உள்ளது. எனவே இப்பள்ளிக்கு சுற்றுச் சுவருடன் விளையாட்டு மைதானம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை