உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்

 கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்

புதுச்சேரி: கலால் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கடற்கரை சாலை காந்தி திடல் அருகே 190 ஆண்டுகள் பழமையான பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் உள்ளது. மத்திய கலால்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ரூ.3.50 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த 26-ந்தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்த நிலையில் கலங்கரை விளக்கத்தை பொதுமக்கள் இன்று முதல் பார்வையிடலாம். அதன்படி தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பார்வையிடலாம். மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை, திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !