மேலும் செய்திகள்
கமேனிக்கு எதிரான விமர்சனம்; கார்த்திக்கு எதிராக போராட்டம்
49 minutes ago | 2
பன்னீரால் தி.மு.க.,விற்கு பயனில்லை
2 hour(s) ago
திருபுவனை : ஓசியில் மதுபானம் கேட்டு ஒயின் ஷாப்பில் கத்தியை காட்டி மிரட்டி, நாட்டு வெடிகுண்டு வீசுவேன் என மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி , மூலக்குளம் ஜெ.ஜெ.நகர் நாகப்பன் மகன் மணிபாலன்,28: ரவுடி. கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது. இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் திருபுவனை அடுத்த நல்லுாரில் உள்ள தனியார் ஒயின் ஷாப்பிற்கு சென்று, அங்கு பணியில் இருந்த விற்பனையாளர் ஆனந்த் ,37; என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ஓசியில் மதுபானம் கேட்டார். ஆனந்த் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த மணிபாலன் சரக்கு கொடுக்காவிட்டால் நாட்டு வெடிகுண்டை கடையில் வீசிவிடுவேன் என மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து ஆனந்த் கொடுத்த புகாரின்பேரில் .திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார், மணிபாலனை கைது செயதனர். அவர் வைத்திருந்த கத்தி மற்றும் மொபைல் போனை பறிமுதல் செய்தனர். பின்னர், மணிபாலனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
49 minutes ago | 2
2 hour(s) ago