மேலும் செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா
29-Apr-2025
பாகூர்: பாகூர் திரவுபதியம்மன் கோவில், தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.பாகூர் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 16ம் தேதி அம்பாள் ஜனனம், 17ம் தேதி அரக்கு மாளிகை எரித்தல், 18ம் தேதி பகாசூரன் வதம், 19ம் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று தீமிதி திருவிழா நடந்தது.இதையடுத்து காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 6:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.விழாவில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, பாகூர் நவதேவஸ்தான கோவில்கள் நிர்வாக அதிகாரி பச்சையப்பன், மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
29-Apr-2025