உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நீர்வரத்து பாதையில் தடை பரிக்கல்பட்டு ஏரி நிரம்புவதில் சிக்கல்

நீர்வரத்து பாதையில் தடை பரிக்கல்பட்டு ஏரி நிரம்புவதில் சிக்கல்

பாகூர் : நீர்வரத்து பாதை தடைப்பட்டுள்ளதால், பரிக்கல்பட்டு ஏரியில் மழை நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பருவ மழை துவங்கி உள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள நீர் நிலைகளில், மழை நீரை சேமித்திடவும், வெள்ள பாதிப்புகளை தடுக்க வேண்டி, நீர்வரத்து மற்றும் வடிகால் வாய்க்கால்களை துார்வாரப்பட்டு வருகிறது.ஆனால், பாகூர் பகுதியில் பல முக்கிய வாய்க்கால் துார்வாரும் பணி முழுமை பெறாமல் உள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று முன்தினம், பாகூர் பகுதியில் உள்ள முக்கிய நீர் நிலை பகுதியை ஆய்வு செய்தார்.அப்போது, மழை நீரை சேமிக்கவும், வெள்ள பாதிப்புகளை தடுக்கவும், நீர் வரத்து மற்றும் போக்கு வரத்து வாய்க்கால்கள் உரிய முறையில் பராமரித்திட வேண்டும் என்றார்.ஆனால், பரிக்கல்பட்டு ஏரிக்கான நீர் வரத்து பாதையில் உள்ள ஷட்டர் கடந்த 4 மாதங்களுக்கும் மேல் மூடப்பட்ட நிலையில் இருப்பதால், அந்த ஏரியில் வாய்க்கால் வழியாக வரும் மழை நீர் செல்லாமல் தடைப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் முழுதும் முள்ளோடை வாய்க்கால் வழியாக சென்று கடலில் கலந்து வருகிறது.இது குறித்து அப்பகுதி விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என, குற்றம் சாட்டி உள்ளன. எனவே, பரிக்கல்பட்டு ஏரிக்கான நீர் போக்கு பாதையில் உள்ள தடையை சரி செய்து நீரை சேமித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை