உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீவனூர், மேல் பேரடிக்குப்பம் அரசு பள்ளிகளில் தினமலர் - பட்டம் இதழ் வினாடி- வினா போட்டி

தீவனூர், மேல் பேரடிக்குப்பம் அரசு பள்ளிகளில் தினமலர் - பட்டம் இதழ் வினாடி- வினா போட்டி

மயிலம் : புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சாரியா கல்வி குழுமம் சார்பில் தீவனூர், மேல் பேரடிக்குப்பம் பள்ளிகளில் வினாடி வினா போட்டிகள் நடந்தது.தீவனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த 'தினமலர் - பட்டம்' இதழின் 'பதில் சொல் அமெரிக்கா செல்' போட்டிக்கு மயிலம் பரிதா சம்சுதீன் தலைமை தாங்கினார். தலைமையா சிரியர் டார்லிங் பெல் ரூபி முன்னிலை வகித்தார். துணைத் தலைமையாசிரியர் கலைச்செல்வி வரவேற்றார்.முன்னதாக இப்போட்டி யில் 95 மாணவ, மாணவி கள் தகுதித் தேர்வான பொதுத் அறிவு தேர்வு எழுதினார்கள். அதில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு 8 அணிகளாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது. 9ம் வகுப்பு மாணவிகள் பிரியா, சந்திரிகா முதலிடம் பிடித்தனர். 9ம் வகுப்பு மாணவிகள் ஐஸ்வர்யா, பாவன பிரியா இரண்டாம் இடம் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில் நினைவு கேடயம் மெடல் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுன்சிலர் பரிதா சம்சுதீன் சிறப்புரையாற்றினார்.இதில் தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் சம்சுதீன், ஆசிரியர்கள் சீதா லட்சுமி, சாந்தகுமாரி, முத்துக்குமார், ஜோதி அம்மாள், சுசித்ரா, குமார், சமூக ஆர்வலர் ரவி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேவதி, துணை தலைவர் கோவிந்தம்மாள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி பிரியா நன்றி கூறினார்.

மேல் பேரடிக்குப்பம்

மேல் பேரடிக்குப்பம் அரசுப் பள்ளியில் தினமலர் நாளிதழ் சார்பில் பட்டம் இதழின் 'பதில் சொல் அமெரிக்கா செல்' வினாடி - வினா போட்டி தலைமை ஆசிரியர் சிவகாமி முன்னிலையில் நடந்தது. பள்ளி ஆசிரியர் செல்வின் வரவேற்றார்.முன்னதாக இப்போட்டியில் 100 மாணவ, மாணவிகள் தகுதித் தேர்வான பொதுத் அறிவு தேர்வு எழுதினர். அதில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு 8 அணிகளாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. 8ம் வகுப்பு மாணவிகள் ஆனந்தி, ரக் ஷிதா முதலிடம் பிடித்தனர். மாணவர்கள் அருண்குமார், முகிலரசன் இரண்டாம் இடம் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' சார்பில் நினைவு கேடயம் மெடல் மற்றும் சான்றிதழ்களை விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க., மகளிர் அணி தலைவி ஜோதி பலராமன் வழங்கி பேசினார்.இதில் பள்ளி ஆசிரியர்கள் முருகன் ஜூலியஸ் சீசர் பரமேஸ்வரி சுரேஷ்குமார், ரெட்டணை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பரந்தாமன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, துணைத் தலைவர் அருள்ஜோதி பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி ஆனந்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை