திருக்குறள் வாழ்வியல் கருத்தரங்கம்
பாகூர்: புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில் சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில், திருக்குறள் வாழ்வியல் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில், மருந்தாளுநர் கல்லுாரி மாணவி இசைமொழி வரவேற்றார். நலப்பணிச் சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கி, திருக்குறளும் வாழ்வியலும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஆலோசகர் வரலாற்று விரிவுரையாளர் முத்துஐயாசாமி முன்னிலை வகித்தார். நலப்பணிச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் செல்வி நோக்கவுரையாற்றினார். மண்டல அமைப்பாளர்கள் மாதவி, செல்வி, சுஜாஸ்ரீ ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவர்கள் சாதனா, தனுஸ்ரீ, சபரிவாசன், தவனேஷ், நிபுன், அருண், தனஸ்ரீ, லட்சுமிபிரியா, மீவஸ்ரீ, மோகனப்பிரியா, ரக்க்ஷிதா, விக்னேஷ், தீபேஷ், சிவகார்த்திகேயன், ஹேமலா, பூஜா, பத்மஸ்ரீ, மதியரசன், முகேஷ், சரினா, கிருத்திகா, கார்த்திகா உள்ளிட்டோர் திருக்குறளில் பயனில கூறாமை குறித்துக் கலந்துரையாடல் செய்தனர். மண்டல அமைப்பாளர் பவித்ரா நன்றி கூறினார். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.