உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபரை கடத்தி சென்று தாக்கிய மூவருக்கு வலை

வாலிபரை கடத்தி சென்று தாக்கிய மூவருக்கு வலை

புதுச்சேரி: முன் விரோதத்தில் வாலிபரை கடத்தி சென்று தாக்கிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.வில்லியனுார் அடுத்த அகரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழனி மகன் பிரதிஷ்வர், 19; இவர் நேற்று முன்தினம் கூடப்பாக்கம் சிவன் அருகில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் மகன் ராம்குமார், 25, மற்றும் அவருடன் வந்த இரண்டு பேர் சேர்ந்து பிரதஷ்வரை, பைக்கில் ஏற்றிச் சென்று, செல்லிப்பட்டு பாலம் கீழ் வைத்து உனது அப்பா பழனி என்னிடம் தேவையில்லாமல் வைத்து கொண்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி, பிரதிஷ்வரை சரமாரியாக தாக்கினர்.பிரதிஷ்வரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். புகாரின் பேரில், ராம்குமார் உட்பட மூவர் மீது வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை