மேலும் செய்திகள்
அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற இரண்டு பேர் கைது
16-Sep-2024
வில்லியனுார் : வில்லியனுார் அருகே கத்தியுடன் சுற்றிய மூவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை ஆரியப்பாளையம், மங்கல புரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இரண்டு கத்தியுடன் சுற்றியமூவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், பிச்சைவீரன்பேட் வாய்க்கால் தெரு பாஸ்கர் மகன் மணிகண்டன், 18; சாரம், நடுத்தெருவை சேர்ந்த ஆனந்தன் மகன் சூரியா, 18, ஆரியப்பாளையம் பாரதி வீதியை சேர்ந்த ராமதாஸ் மகன் ரோகித், 19, ஆகியோர் என தெரியவந்தது.இதில் மணிகண்டன் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் உள்ளது. மற்ற இருவரும் கல்லுாரியில் படித்து வருகின்றனர். மூவரும் குற்ற செயலில் ஈடுபடும் நோக்கதுடன் கத்தியுடன் சுற்றியது உறுதியானது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
16-Sep-2024