மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் மாணவர் தின விழா
26-Jul-2025
புதுச்சேரி: புதுச்சேரி குருசுக்குப்பம் அரசுப் பள்ளியில முப்பெரும் விழா நடந்தது. தலைமையாசிரியர் சீனுவாசன் வரவேற்றார். பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயன்ன் தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வி அதிகாரிகள் ராமச்சந்திரன், டி.ஐ.எஸ்., அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பள்ளி அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு 1,500, இரண்டாம் பரிசு 1,000, மூன்றாம் பரிசு 500 ரூபாய் மற்றும் சான்றிதழ், அடையாள அட்டை , பெல்ட், சீருடை, விலையில்லா நோட்டு புத்தகம் ஆகியவற்றை மாணவர்களுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியைகள் நித்தியானந்தி, அன்பரசி , கிரிஜா உட்பட பலர் செய்திருந்தனர்.
26-Jul-2025