உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு

புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு

பாகூர்: ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில், டெங்கு மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஆசிரியர் ரகுநாதன் வரவேற்றார். தலைமையாசிரியர் நான்சி ஏஞ்சலின் தலைமை தாங்கினார். ஆதிங்கப்பட்டு அரசு மருத்துவமனை டாக்டர் சூர்யாபிரபு மற்றும் செவிலியர் மதிஒளி ஆகியோர் நோக்கவுரையாற்றினர்.டெங்கு மற்றும் புகையிலை ஒழிப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. ஓவியம், கட்டுரை ஸ்லோகன் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை, செல்வி, வர்ஜினியா, ஆறுமுகம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். ஆசிரியர் யோகானந்தன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை