உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சுற்றுலா படகு ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் போராட்டம்

 சுற்றுலா படகு ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை பகுதியில் நடக்கும் படகு சவாரி குறித்து தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவாவின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வம்பாகீரப்பாளையம் சுற்றுலா படகு ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோனாம்பாளையம் சா லை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தங்களது தொழில் மற்றும் மீனவர் சமூகத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதுள்ளதாக கூறி, அமைப்பாளர் சிவாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில், பங்கேற்ற தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பேசுகையில், அரசிடம் முறையாக உரிமம் பெற்று சுற்றுலா படகு சவாரி தொழில் செய்து வருகின்றனர். உரிமம் இல்லாமல் யாராவது படகு இயக்கினால், அதை கண்காணிக்க வேண்டிய துறைகள் இருக்கின்றன. அவர்கள் நடவடிக்கை எடுக்கட்டும். அதைவிடுத்து, மீனவர்களின் தொழிலை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது. மீனவர்கள் குறித்து யார் தவறாக பேசினாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக யாரையும் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டி பேசக்கூடாது. எந்த விஷயமாக இருந்தாலும் உண்மை நிலையை தெரிந்துகொண்டு பேச வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை