தீவன புல் ஏற்றி சென்ற டிராக்டர் டிப்பர் கவிழ்ந்ததால் பரபரப்பு
பாகூர்: புதுச்சேரி – கடலுார் சாலை வழியாக, தீவன புல் ஏற்றிச் சென்ற டிராக்டர் டிப்பர், சாலை பள்ளத்தில் சிக்கி கட்டுப்பாட்டை இழுந்து கவிழ்ந்ததால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி – கடலுார் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.,28) மதியம் புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி தீவன புல் ஏற்றிச் சென்ற டிராக்டரின் டிப்பர், சாலை பள்ளத்தில் சிக்கி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கிய வாகனத்தை கிரேன் மூலமாக அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.