உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை விபத்தில் வியாபாரி படுகாயம்

சாலை விபத்தில் வியாபாரி படுகாயம்

பாகூர் : பைக் மோதிய விபத்தில், தேங்காய் வியாபாரி படுகாயமடைந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலுார் மாவட்டம் ராமாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் 75; தேங்காய் வியாபாரி. இவர், கடந்த 2ம் தேதி, கன்னியக்கோவிலில் தேங்காய் வியாபாரம் செய்ய வந்துள்ளார். பின்னர், வியாபாரத்தை முடித்து விட்டு, அங்குள்ள தனியார் மதுபான கடை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக சென்ற டி.வி.எஸ். ஸ்கூட்டி வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர், ஆறுமுகத்தின் மீது மோதி உள்ளார். இதில், படுகாயமடைந்த ஆறுமுகம், பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது மகன் சிவசங்கர் 52; புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !