போலீஸ் ஸ்டேஷனை வியாபாரிகள் முற்றுகை
புதுச்சேரி : பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனை வியாபாரிகள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலை அருகே புட் கோர்ட் உள்ளது. அங்கு, அரியாங்குப்பம் அருண்குமார், 27; உப்பளம் அருண் ஆகியோர் என்பவர் பானி பூரி கடைகளை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கிடையே தொழில் போட்டி தொடர்பாக முன்விரோதம் உள்ளது.கடந்த 25ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு, ஏற்பட்டது. இரு தரப்பை சேர்ந்தவர்களும் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக, இருவரும் தனித்தனியாக கொடுத்து புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.அதனை தொடர்ந்து, அருண்குமார் தரப்பை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட வியாபாரிகள், தங்களை தாக்கிய அருணை கைது செய்ய வேண்டும் என, பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனை நேற்று காலை 11:30 மணியளவில் முற்றுகையிட்டனர். அவர்களிடம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். அதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.