உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து போலீசார் ஆலோசனைக் கூட்டம்

போக்குவரத்து போலீசார் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்து சீனியர் எஸ்.பி., அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு போக்குவரத்து எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. போக்குவரத்து போலீஸ் எஸ்.பி.,க்கள் மோகன்குமார், செல்வம், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுரேஷ் பாபு, சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், நகரப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது, வார விடுமுறை நாட்களில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது, புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் வாகனத்தை நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்குவது, முறைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ