உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி

 டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி எம்.ஜி.ஆர்., நகரில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியினை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முதலியார்பேட்டை தொகுதி எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொது மக்களின் வீடுகளில் உள்ள மின் சாதனங்கள் பொருட்கள் தொடர்ச்சியாக பழுதடைந்து வருகின்றன. இதையடுத்து, குறைந்த மின்னழுத்ததை சரி செய்யும் பொருட்டு, அப்பகுதியில் மின்துறை மூலம் ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கான பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, சம்பத் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியினை பூஜை செய்து துவக்கி வைத் தார். இதில், உதவி பொறியாளர் அருணகிரி, இளநிலை பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை