உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செவிலியர் பணித் தேர்வில் வெளிப்படை தன்மை தேவை

செவிலியர் பணித் தேர்வில் வெளிப்படை தன்மை தேவை

புதுச்சேரி: செவிலியர் பணிக்கான தேர்வில் வெளிப்படை தன்மை வேண்டும் என, மாணவர் மற்றும் ஆசிரியர் சங்க தலைவர் பாலா வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: புதுச்சேரி, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதிதாக 226 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்நிலையில் அரசால் பின்பற்றப்படும் 69 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மேலும் தேர்வு மற்றும் கலந்தாய்வை வெளிப்படைத் தன்மையுடன் நடத்த குழு அமைக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் போலி அவணங்கள் மூலம் விண்ணப்பிப்பவர்களை தேர்வு செய்ய கூடாது. புதுச்சேரியை பூர்வீகமாக கொண்ட மாணவர்களுக்கு உரிய சான்றிதழ்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை