உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காலாவதி வாகனங்கள் ரூ.1.89 கோடிக்கு ஏலம் போக்குவரத்து துறை நடவடிக்கை

காலாவதி வாகனங்கள் ரூ.1.89 கோடிக்கு ஏலம் போக்குவரத்து துறை நடவடிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி அரசு துறைகளில் 15 ஆண்டுகளுக்கு மேல் காலாவதியான 644 வாகனங்களை ஏலம் விட்டதில் 1 கோடியே, 89 லட்சம் ரூபாய் அரசுக்கு கிடைத்துள்ளது.நாடு முழுதும் அரசு துறைகளில் பயன்பாடு முடிந்து காலாவதியான வாகனங்களை ஏலம் விடுவதற்கான புதிய திட்டத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலம், பயன்படுத்தப்படாத வாகனங்களை ஏலத்தில் விற்று அரசுக்கு வருமானம் ஈட்டுவதோடு, அரசு அலுவலகங்களில் நின்று வாகனங்கள் மக்கி, குப்பையாக வீணாவதை தடுக்க கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு துறைகளில் 15 ஆண்டுகளை கடந்து காலாவதியான வாகனங்களை ஏலம் விடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதையொட்டி, காலாவதியான வாகனங்களை கணக்கெடுக்கும் பணியை புதுச்சேரி போக்குவரத்து துறை கடந்த 2023ம் ஆண்டு துவங்கியது. இதில் கல்வி, பொதுப்பணி, வருவாய், நகராட்சி உள்ளிட்ட அரசு துறைகள் மற்றும் அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கார்ப்பரேஷன் ஆகிய துறை அலுவலகங்களில் இரு சக்கர வாகனம் துவங்கி, பஸ் வரை உள்ள 1,094 வாகனங்கள் கண்டறியப்பட்டு, இவற்றை ஏலம் விடும் பணி கடந்த மாதம் நடந்தது. இதில் முதல் கட்டமாக அரசுத் துறைகளில இருந்த 431 வாகனங்களை ஜெய்ப்பூரை சேர்ந்த ஒர்க் டெக் இன்ஜினியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.1 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. கார்ப்பரேஷனில் உள்ள 37 வாகனங்களை இந்துஸ் தான் ரீ சைக்கிளிங் அப் என்ற நிறுவனம் 11 லட்சத்தி 3,590 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஏலம் விடப்பட்ட வாகனங்களை எடுத்துச் செல்லும் பணியில் இரண்டு தனியார் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக புதுச்சேரி, காரைக்கால், மாகி ஆகிய இடங்களில் உள்ள வாகனங்களை ஏலம் விட தயாராகி வருகிறது.

வாகனங்களை கண்டறிய

திணறும் அதிகாரிகள்புதுச்சேரி அரசு துறைகளுக்கு வாங்கப்பட்ட வாகனங்களின் விபரங்கள் கோப்புகளில் உள்ளது. ஆனால் வாகனங்கள் எங்கு நிற்கிறது என்பதை கண்டறிய அரசு அதிகாரிகள் திணறுகின்றனர்.ஏலம் விடப்பட்ட அரசு துறை வாகனங்களின் ஏலத்தொகை அரசு கருவூலத்துக்கு சென்று விடும். கார்ப்பரேஷன் வாகனங்களின் தொகைகள் சம்பந்தப்பட்ட கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு கொடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ