உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கருவூலக ஊழியர் மயங்கி விழுந்து சாவு

கருவூலக ஊழியர் மயங்கி விழுந்து சாவு

புதுச்சேரி :நெல்லித்தோப்பு, பெரியார் நகர், 9வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சசிக்குமார், 45; புதுச்சேரி அரசு கருவூலக ஊழியர். கடந்த நவ., 10 ம் தேதி சசிக்குமார் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்த அடைப்பு ஏற்பட்டதால், நவ., 12ம் தேதி தலையில் அறுவை சிகிச்சை நடந்தது. கடந்த 6ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிக்குமார் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். கதிர்காமம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்உயிரிழந்தார். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை