உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சாரம் தாக்கி அடிப்பட்ட குரங்கிற்கு சிகிச்சை

மின்சாரம் தாக்கி அடிப்பட்ட குரங்கிற்கு சிகிச்சை

புதுச்சேரி: மின்சாரம் தாக்கியதால், காயமடைந்த குரங்கிற்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.தட்டாஞ்சாவடியில், பெண் குரங்கு ஒன்று, மின் கம்பியில் சிக்கி, மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து நடக்க முடியாமல் நேற்று அப்பகுதியில் வேகு நேரமாக படுத்து கிடந்தது. இதுபற்றி, அப்பகுதியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து, வனத்துறை ஊழியர்கள் காயமடைந்த குரங்கை, பிடித்து சென்று, கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். குணமடைந்த குரங்கு மயிலம் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது என, கால்நடை இணை இயக்குனர் குமரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ